கூட்டணி ஆட்சி குழப்பம்! பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்!!! - விளக்கமளித்த இபிஎஸ்
Coalition government chaos AIADMK will win with a majority and form government EPS explained
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது," 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் கூட்டணி ஆட்சி அமையுமா? என்று தொடர்ந்து பலரும் என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அதற்கு "ஆம்" என்பதே எனது பதில் ஆகும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருந்தார்.தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தெரிவிக்கையில்,"பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும்,கூட்டணி ஆட்சி என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கும் நிலையில், தனித்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி வருகிறார்.இதில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இரு கட்சி தலைவர்களின் கருத்துகளால் குழப்பம் தொடர்கிறது.
English Summary
Coalition government chaos AIADMK will win with a majority and form government EPS explained