600 கோடி ரூபாய் மோசடி வழக்கு: நீதிமன்றத்தை ஏமாற்றிய முன்னாள் எம்எல்ஏவின் ஜாமீன் ரத்து: உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு..!
Supreme Court cancels bail of former MLA who cheated court in Rs 600 crore fraud case and orders immediate surrender
ரூ.600 கோடி மோசடி செய்த வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற முன்னாள் எம்எல்ஏவின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதோடு, அவரை உடனடியாக சரணடைய உத்தரவிட்டுள்ளது.
அரியானா மாநிலம், சமல்கா தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தரம் சிங் சோக்கர், குருகிராமில் போலி வீட்டுக் குடியிருப்புத் திட்டம் மூலம் சுமார் 3,700 பேரிடம் ரூ.600 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
-a9urp.png)
இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்துள்ளார். கடந்த மே 05-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள ஷாங்கிரி-லா ஓட்டலின் பாரில் வைத்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, சுதந்திரமாக வெளியில் நடமாடியுள்ளார். மேலும், அவர் பலமுறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்ததும், காவலில் இருந்த போது பெரும்பாலான நேரத்தை மருத்துவமனைகளிலேயே கழித்துள்ளார்.
இதனால், அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை எழுப்பிய நிலையில், அவரது இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
-jnyzc.png)
விசாரணையின்படி, தரம் சிங் சோக்கரை உடனடியாக சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு உத்தரவிட்ட்டுள்ளது. அத்துடன், அவரின் உடல்நிலை தொடர்பான மருத்துவ ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அவர் நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சிப்பதாகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
அப்போது தரம் சிங் சோக்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தவறான தகவல்களை முன்வைத்ததற்காக நீதிமன்றத்தில் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Supreme Court cancels bail of former MLA who cheated court in Rs 600 crore fraud case and orders immediate surrender