வரும் ஜுலை 14-இல் புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் மற்றும் 03 நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு..!
John Kumar and 03 nominated MLAs will take oath as the new minister in Puducherry on July 14th
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரை தொடர்ந்து, நியமன எம்எல்ஏக்களான வி.பி ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். அங்கு பாஜ எம்எல்ஏக்களில் சிலர் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தர வேண்டும் எனவும் முக்கிய நிர்வாகிகளுக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.
-4bqhc.png)
இந்நிலையில் புதிய அமைச்சராக பாஜவை சேர்ந்த ஜான்குமாரை பரிந்துரைத்து ஆளுநர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி கடிதம் அளித்திருந்தார். அத்துடன், 03 புதிய நியமன எம்எல்ஏக்களாக பாஜவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து புதிய அமைச்சராக ஜான்குமார் நியமிப்பதற்கான ஒப்புதல் கடிதம் தலைமை செயலருக்கு வந்துள்ளது. அத்துடன், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் பிரவீன்குமார் ராஜியிடமிருந்து தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் 03 நியமன எம்எல்ஏக்களான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் நேற்று ஆளுநரிடம் இருந்து தலைமை செயலகத்துக்கு வந்துள்ளது.
-cwmec.png)
இதையடுத்து அமைச்சர் ஜான்குமாரும், 03 நியமன எம்எல்ஏக்களும் வருகிற 14-ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜான்குமாருக்கு அம்மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். அவரை தொடர்ந்து, 03 நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் செல்வம், பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
English Summary
John Kumar and 03 nominated MLAs will take oath as the new minister in Puducherry on July 14th