மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு: கமல்ஹாசன் உட்பட நான்கு பேர்ஜூலை 25ஆம் தேதி பதவியேற்பு! - Seithipunal
Seithipunal


போட்டியின்றி தேர்வு பெற்ற கமல்ஹாசன், பி. வில்சன், கவிஞர் சல்மா, மற்றும் சிவலிங்கம் ஆகிய நான்கு பேரும் வரும் ஜூலை 25ஆம் தேதி மாநிலங்களவையில் எம்.பி பதவியை ஏற்க உள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ, பி. வில்சன், சண்முகம், எம்.எம். அப்துல்லா, அன்புமணி ராமதாஸ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24, 2025 அன்று முடிவடைகிறது. இதையடுத்து ஏற்படும் ஆறு காலியிடங்களுக்கு மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து , திமுக சார்பில் பி. வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மற்றும் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம) தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் தனபால் மற்றும் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏனைய வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யாததால், இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வாகினர்.

மாநில தேர்தல் அதிகாரி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பதவிக்காலம் முடிவடையும் ஆறு உறுப்பினர்களுக்குப் பதிலாக மேற்கண்ட ஆறுபேர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், போட்டியின்றி தேர்வு பெற்ற கமல்ஹாசன், பி. வில்சன், கவிஞர் சல்மா, மற்றும் சிவலிங்கம் ஆகிய நான்கு பேரும் வரும் ஜூலை 25ஆம் தேதி மாநிலங்களவையில் எம்.பி பதவியை ஏற்க உள்ளனர்.

இந்தப் பதவியேற்பு நிகழ்வுக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாம். இது கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் முதல்முறையாகக் கட்சி தலைவராக நுழையும் முக்கியமான நிகழ்வாகும்.மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்கான புதிய தொடக்கத்தையும் இது குறிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unopposed election for the Rajya Sabha Four candidates including Kamal Haasan will take office on July 25


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->