அடக்கடவுளே! திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்...! 2 பேர் பலி
4 storey building suddenly collapsed 2 people died
புது டெல்லி மாநிலத்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள வெல்கம் பகுதியில் இன்று அதாவது சனிக்கிழமை காலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சுவதாக சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, கட்டிடத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அருகில் வசிக்கும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியியுள்ளனர்.
இதில் மீட்பு பணிகளில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடல் மீட்க்கப்பட்டது. மேலும் ஒரு வயது குழந்தை உட்பட 8 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சமபவத்தில் மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் கட்டிடத்தின் 3 மாடிகளும் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
4 storey building suddenly collapsed 2 people died