அஜித் குமார் மரணம்: த.வெ.க. விஜய் தலைமையில் நாளை மிகப்பெரிய போராட்டம்! - Seithipunal
Seithipunal


அஜித் குமார் மரணம் தொடர்பாக நாளை த.வெ.க.சார்பில் நடைபெறும் போராட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இது தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், சமீபத்தில் திருட்டு வழக்கின் விசாரணைக்குள் போலீசாரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வை கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பிலும் விழிப்புணர்வு மற்றும் நீதிக்கான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலில், சென்னை மாநகராட்சி மற்றும் போலீசாரிடம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சிவானந்தா சாலை அருகே உள்ள தூர்தர்ஷன் அலுவலகம் முன்பு, ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 10 மணி முதல் போராட்டம் நடைபெற, போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கழக தலைவர் விஜய் நேரடியாக கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இது தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

தமிழக முழுவதிலும் இருந்து த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஏற்கனவே சென்னையை வந்தடைந்துள்ள நிலையில், சுமார் 10,000 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது த.வெ.க. மாநில அளவில் நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வமான கண்டனப் போராட்டம் என்பதால், கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்கத் தயாராக உள்ளனர். போராட்ட ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஒருங்கிணைத்து வருகிறார்.

போராட்டத்துக்காக காவல் துறை குவிக்கப்படும் என்றும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith Kumars death A massive protest will take place tomorrow under the leadership of TVK Vijay


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->