இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியதும் 07 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பு: இஸ்ரோ அறிவிப்பு..!
ISRO announces that Indian astronaut Subhanshu Shukla will be under medical observation for 07 days after returning to Earth
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பூமிக்கு திரும்பியதும், சுபன்ஷு சுக்லா ஏழு நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், குறித்த நான்கு வீரர்களும் விண்வெளிக்கு சென்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு இவர்கள், வரும் ஜூலை 14-ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி மாலை 04:35 மணிக்கு சுபன்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் பூமி திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

இவர்கள் வரும் க்ரூ டிராகன் விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி அன்று மாலை 03 மணிக்கு கலிபோர்னியா கடற்கரையை வந்தடையும் என கூறப்படுகிறது. க்ரூ டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு, பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப அவரது உடலை சரிசெய்ய உதவும் வகையில், ஏழு நாட்கள் சுபன்ஷு சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
ரூ. 550 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுபன்ஷு சுக்லாவின் இந்த பணி, இந்தியாவின் மனித விண்வெளிப் பயண லட்சியங்களுக்கு, குறிப்பாக 2027-இல் மேற்கொள்ளப்பட இருக்கும், ககன்யான் திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சுபன்ஷு சுக்லாவின் உடல்நலம் மற்றும் உளவியல் தகுதியை இஸ்ரோவின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கடந்த சில நாட்களாக, உன்னிப்பாகக் கண்காணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
ISRO announces that Indian astronaut Subhanshu Shukla will be under medical observation for 07 days after returning to Earth