தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிறார் அமித்ஷா, தனித்துதான் ஆட்சி என்கிறார் இ.பி.எஸ்: பரப்பரப்பை ஏற்படுத்தும் தமிழக அரசியல் களம்..! - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜ தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகின்றது. இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா அளித்த பேட்டியிலும் கூட்டணி ஆட்சிதான் என்று கூறினார்.

ஆனால், இதற்கு பதிலடியாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ள்ளமை தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் எழுச்சி பயணம் மேற்கொள்கிறார்.

நேற்று விழுப்புரம் பகுதியில் பயணத்தை இபிஎஸ் முடித்துவிட்டு இரவில் புதுச்சேரி அருகே உள்ள பூரணாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஓய்வெடுத் தார். பின்னர் அவர் இன்று காலை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அதற்கு முன்னர், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

‘‘தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். அமித்ஷா அவர்கள், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதை மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS says AIADMK will form government alone in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->