ராம் விலாஸ் கட்சியின் தலைவர் மற்றும் ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்: பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சரும், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட்டுள்ளது. இதனால் பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, கடந்த வாரம் சரண் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சிராக் பஸ்வான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று குறிப்பிட்டார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. அவரது  இந்த அறிவிப்பால் மாநில அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘டைகர் மெராஜ் இடிசி’ என்ற பெயரில் பயனர் ஒருவர் சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டலை விடுத்துள்ளார். 

அதாவது, சிராக் பஸ்வானுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்ததின் காரணமாகவே இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, அவரது கட்சி செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாட்னா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death threat to Ram Vilas Party leader and Union Minister Chirag Paswan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->