பீகார் அதிர்ச்சி, கரூர் கிளப்பு…! விஜய்யின் அரசியல் கணக்கு அதிமுக திசை பக்கம் மாறுகிறதா...?
Bihar shock Karur club Is Vijays political calculations shifting towards AIADMK
விஜய் தனது கட்சியைத் துவக்கிய காலத்திலிருந்தே, பா.ஜனதாவை கொள்கை எதிரியாகவும், தி.மு.க.-வை நேரடி அரசியல் எதிரியாகவும் வகைப்படுத்தி வந்தார். தி.மு.க. மீது அவர் தீவிரமான விமர்சன அவிழ்த்தாலும், அ.தி.மு.க. குறித்து அவரது பேச்சுகள் சற்றே மிதமாக இருந்தது. இதனால், விஜய்–அ.தி.மு.க. இணைப்பு சாத்தியம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.ஆனால் விஜய் “ஆட்சிப் பங்கு–முதல் அமைச்சர் பதவி” போன்ற கோரிக்கைகளை முன்வைத்ததால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுக்கு அது ஏற்றதாக இருந்ததில்லை.
எனவே இரு கட்சிகளும் இணைந்தது உறுதியாகிய பிறகு, விஜய் அ.தி.மு.க.-வையும் நேரடியாக விமர்சிக்கத் தொடங்கினார். எடப்பாடி பழனிசாமி மீதே அவர் நேரடி தாக்குதல்களை கூறினார். இதன் மூலம் த.வெ.க. தனித்துப் போகும் பாதையை விஜய் தெளிவாக வெளிப்படுத்தினார்.அதேசமயம் கரூரில் நடந்த நெரிசல் மரணம் விஜய்யின் மனதில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி, அடுத்து அண்ணாமலை. இதனால் த.வெ.க. உள்ளே சிலரிடம்,
“தி.மு.க. மீண்டும் வரக்கூடாது; நம்மை முற்றிலுமாக ஓரம் தள்ளிவிடுவார்கள். எனவே அ.தி.மு.க.–பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தி.மு.க.-வை வீழ்த்த வேண்டும்”
என்ற கருத்துக்கள் எழுந்தன.ஆனால் விஜய் வேறு கணக்கு போட்டார். சிறுபான்மை ஓட்டுகள் கைவருவதற்கும், தேசிய அரசியலில் தன்னுடைய தடத்தை வலுப்படுத்துவதற்கும், தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸை இழுத்து தன் அணியில் சேர்க்கலாம் என்று யோசித்ததாகவும், அதற்காக ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடந்ததாகவும் கூறப்பட்டது.ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்,“தி.மு.க. கூட்டணியில் இருந்தால் MLA வாய்ப்பு அதிகம்; விஜய்யுடன் சேர்ந்தால் பதவி நிச்சயம் கிடைக்காது”என்ற கணக்கிலேயே உள்ளனர். ராகுல் காந்தியும்,“முதலில் விஜய் தேர்தலை சந்தித்து தனது சக்தியை நிரூபிக்கட்டும்; நம்பகமான கூட்டணியை விட்டு புதியவரை நம்புவது அபாயம்”என்று தி.மு.க.-விடம் இருந்து விலக மறுத்ததாக தகவல்கள் வெளியாகின்றன.இதற்கிடையில் பீகார் தேர்தலில் காங்கிரஸுக்கு வந்த பெரும் தோல்வி, விஜய்யின் கணக்குகளையே சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது. காங்கிரசில் உள்ள குழுக்களிடையேயான மோதல்கள், கோஷ்டி பிரச்சினைகள், த.வெ.க.-வையும் தடுமாறச் செய்யக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.மேலும் த.வெ.க. வேட்பாளர் தேர்வு பணியில்,செலவு செய்யும் திறன் கொண்ட, நிலைபெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது வெளிப்பட்டுள்ளது.
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதற்கான நிதிசுமை,
திராவிட கட்சிகள் வேட்பாளர்களை “விலை பேசி வாங்கி” கடைசிநேரத்தில் விலகவைக்கும் அபாயம்,
இவை அனைத்தும் விஜய்யை சிந்தனையில் ஆழ்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், தி.மு.க.-க்கு எதிராக நேரடி தாக்குதலை நடத்தக்கூடிய மிக பெரிய சக்தி அ.தி.மு.க.–பா.ஜனதா கூட்டணி என்பதால், அந்த அணியில் இணைந்தால் த.வெ.க.-க்கு
99% தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு
அரசியல் பாதுகாப்பு
தி.மு.க.-வை தள்ளி நிறுத்தும் திறன்
என்று சாத்தியக்கூறுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
இந்த அரசியல் கணக்குகளை அனைத்தையும் வைத்து, விஜய்–அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை முதல் கட்டத்தில் சுமுகமாகவே முடிந்துள்ளது என்றும், அடுத்த கட்டத்தில் அ.தி.மு.க.-வின் முக்கிய தலைவர்கள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் என்றும் தகவல் கசிந்துள்ளது.
English Summary
Bihar shock Karur club Is Vijays political calculations shifting towards AIADMK