நடிகை மீரா வாசுதேவன்: மூன்றாவது கணவரையும் பிரிந்ததாக அறிவிப்பு
Actress meera vasudevan 3rd marriage divorce
சென்னை: தமிழில் 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'ஜெர்ரி', 'அடங்க மறு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மீரா வாசுதேவன். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி மற்றும் தெலுங்குப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.
மீரா வாசுதேவன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல் திருமணம்: கடந்த 2005-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலைத் திருமணம் செய்தார். இந்த உறவு 2010-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
இரண்டாவது திருமணம்: பின்னர், 2012-ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கேனைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். இந்தத் திருமணமும் 2016-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
மூன்றாவது திருமணம்: விவாகரத்தைத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் விபின் என்பவரை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், தற்போது அவரையும் பிரிந்துவிட்டதாக மீரா வாசுதேவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "2025 ஆகஸ்ட் மாதம் முதல் நான் தனிமையாக இருக்கிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். தற்போது நான் என் வாழ்க்கையின் மிக அழகான, அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Actress meera vasudevan 3rd marriage divorce