சின்னஞ்சிறு அடிகளிலிருந்து பெரிய தாவல்கள் வரை…MBA பட்டம்பெற்ற மகனை நினைத்து பெருமைப்படும் விசித்ரா.. குவியும் வாழ்த்து!
From small steps to big leaps Vichitra is proud of her son who graduated with an MBA Congratulations galore
90களில் கவர்ச்சி மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை விசித்ரா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. போர்க்கொடி படத்தின் மூலம் அறிமுகம் ஆன அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு மலேஷியாவில் குடும்பத்துடன் செட்டில் ஆன விசித்ரா, குக் வித் கோமாளி மற்றும் பின் பிக் பாஸ் சீசன் 7 மூலம் மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் அவர் பகிர்ந்த வாழ்க்கை அனுபவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தெலுங்கில் ஒரு பிரபல நடிகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் தான் சினிமாவை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது என வெளிப்படையாக கூறியிருந்தார்.
சினிமாவை விட்டு விலகிய பிறகு முழுமையாக குடும்பத்திற்காகவே வாழ்ந்த நடிகை விசித்ரா, தனது மூன்று மகள்களையும் பொறுப்புடன் வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது மூத்த மகன் ரோகன் சாஜி MBA பட்டம் பெற்றுள்ளார். அந்த பட்டமளிப்பு விழா வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த விசித்ரா,"சின்னஞ்சிறு அடிகளிலிருந்து பெரிய தாவல்கள் வரை… இன்று என் மகன் MBA பட்டம் பெறுகிறான்; பெருமையால் என் இதயம் நிரம்பி வழிகிறது"என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள், சக கலைஞர்கள் பலரும் விசித்ராவுக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
English Summary
From small steps to big leaps Vichitra is proud of her son who graduated with an MBA Congratulations galore