மார்பக வலி நீங்கியது, சுதந்திரம் கிடைத்தது! இப்போது நான் பட்டாம்பூச்சியைப் போல லேசாக உணர்கிறேன்-ஷெர்லின் சோப்ராவின் உணர்ச்சிகரமான பதிவு
Breast pain gone freedom found Now I feel light butterfly Sherlyn Chopras emotional post
கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ‘டைம் பாஸ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த நடிகை ஷெர்லின் சோப்ரா, பின்னர் ‘ரெட் ஸ்வாக்’, ‘வாணி’, ‘காமசூத்ரா 3D’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன் மார்பகத்தை பெரிதாக்கும் காஸ்மெடிக் சர்ஜரி செய்திருந்த ஷெர்லின், ஆரம்பத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தாலும், அண்மையில் தொடர்ந்து முதுகு, தோள், கழுத்து பகுதியில் கடுமையான வலி அனுபவித்து வந்தார்.

இதன் தொடர்ச்சியான அவதியால் களைத்த அவர், மருத்துவர் ஆலோசனையின் பேரில் மார்பகத்தில் பொருத்தப்பட்டிருந்த இம்ப்ளாண்டுகளை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். அந்த அறுவை சிகிச்சையின் மூலம், அவரது மார்பகத்திலிருந்து மொத்தம் 825 கிராம் எடையுடைய இம்ப்ளாண்டுகள் நீக்கப்பட்டன.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனது அனுபவத்தை பகிர்ந்த ஷெர்லின் சோப்ரா, சமூக வலைதளத்தில்,“என் உடல் மிக லேசாகி விட்டது. பல மாதங்களாக என்னை துன்புறுத்திய வலிகள் அனைத்தும் மறைந்துபோய்விட்டன.
825 கிராம் எடை என்மீது இருந்த பெரிய சுமை அகற்றப்பட்டது. இப்போது நான் ஒரு பட்டாம்பூச்சியைப் போல சுதந்திரமாக உணர்கிறேன். எந்த சுமையையும் வாழ்க்கையில் நிரந்தரமாக சுமந்து கொண்டு வாழக்கூடாது என்பதே என் நம்பிக்கை”என்று உணர்ச்சி மிகுந்த பதிவை வெளியிட்டார்.
English Summary
Breast pain gone freedom found Now I feel light butterfly Sherlyn Chopras emotional post