அந்த திமுக அமைச்சரை ஓட ஓட விரட்ட வேண்டும்... இது மக்களின் கடமை - கொந்தளிக்கும் நயினார் நாகேந்திரன்!
BJP Nainar nagendran DMK Minister anitha radhakrishnan
தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வரவிருக்கும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கோவில்பட்டியில் நடைபெற்ற 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
நயினார் நாகேந்திரன் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி வருமானம் வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், மதுக்கடைகளைக் குறைப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையைக்கூடக் குறைக்காமல் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நயினார் நாகேந்திரன், "2001-இல் ரூ. 50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ. 500 கோடிக்குச் சொத்து சேர்த்துள்ளார். இது நாட்டு மக்களின் பணம்" என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டு, தி.மு.க.வுக்குச் சென்று இவ்வளவு சம்பாதித்துள்ளதாகவும், அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், "வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரைத் தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்" என்று கூட்டத்தில் இருந்தவர்களை வலியுறுத்தினார்.
English Summary
BJP Nainar nagendran DMK Minister anitha radhakrishnan