நாளை கோவைக்கு வரும் பிரதமர் மோடி! உச்சகட்டப் பாதுகாப்பு!
pm modi kovai vivasaya manadu
இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்கக் கோரியும், தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்குச் செல்கிறார்.
மாநாட்டில் பிரதமர் மோடி, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதுடன், சிறப்பாகச் செயல்பட்ட விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறார். மேலும், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லிக்குப் பயணிக்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, கோவையில் உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாடு நடைபெறும் மற்றும் பிரதமர் பயணிக்கும் பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
pm modi kovai vivasaya manadu