அதிமுக தான் இதில் அதிக வாக்குகளை இழக்க போகிறது... ஆருடம் கூறும் சீமான்!
NTK Seeman ADMk Vote bank Election 2026 SIR
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தக் குறைபாடுள்ள நடைமுறையால் குறைந்தது ஒரு கோடிப் பேர் வாக்குரிமையை இழப்பார்கள் என்று கவலை தெரிவித்தார்.
"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதும், ஓட்டுக்குக் காசு கொடுத்ததும் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? இவற்றையெல்லாம் சரிசெய்ய முடியாத தேர்தல் ஆணையம், வாக்குரிமையை இவ்வளவு தான்தோன்றித்தனமாகப் பதிவு செய்யச் சொல்வது எப்படிச் சரியாகும்?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளுக்கு அமைப்பு உள்ளதாகவும், ஆனால் தங்களைப் போன்ற வளர்ந்து வரும் கட்சிகள் இந்த நெருக்கடியான சூழலை எப்படி எதிர்கொள்ள முடியும் என்றும் சீமான் வினவினார்.
மேலும், "இரண்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இது என்ன மாதிரியான நெருக்கடி? மக்களை ஏன் பதற்றமாகவே வைத்துள்ளீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், "அ.தி.மு.க. எஸ்ஐஆரை ஆதரிக்கிறது. ஏனென்றால், இது அவர்களின் எஜமானர் கொண்டு வந்தது. பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது" என்று விமர்சித்தார்.
English Summary
NTK Seeman ADMk Vote bank Election 2026 SIR