தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மென்ட்’ கேட்டாங்க..! நடிகை மான்யா ஆனந்த் குற்றச்சாட்டு!
Actress manya Dhanush movie
சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வானத்தைப் போல' தொடர் மூலம் பிரபலமான நடிகை மான்யா ஆனந்த், அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் திரையுலகில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'கயல்', 'அன்னம்' போன்ற பல சீரியல்களின் மூலம் பிரபலமான மான்யா ஆனந்த், தற்போது உடற்தகுதிக் (ஃபிட்னெஸ்) பயிற்சிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது:
"தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்கள் நடிக்க முடியுமா, அப்படி நடித்தால் அதற்கு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். நான், அதுவெல்லாம் பண்ண மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். அதற்கு அந்த நபர், தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டீர்களா என்று மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்."
மேலும், சமீபத்தில் கூட ஷ்ரேயஸ் தனக்குத் தனுஷ் படத்தின் ஸ்கிரிப்டை அனுப்பி நடிக்க விருப்பமா என்று கேட்டதாகவும், ஆனால் தான் அந்தக் கதையைக்கூடப் படிக்கவில்லை என்றும் மான்யா ஆனந்த் தெரிவித்தார். "நாங்கள் நடிகர்கள், வேறு தொழில் செய்பவர்கள் இல்லை," என்றும் அவர் காட்டமாகப் பேசினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, திரையுலகில் நிலவும் அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம் குறித்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
English Summary
Actress manya Dhanush movie