திருப்பூரில் கலாச்சார விழாவில் அதிர்ச்சி...! - கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு
Shocking incident cultural festival Tiruppur slipper thrown at poet Vairamuthu
திருப்பூரில் நடைபெற்ற ஒரு கலாச்சார விழாவில், கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி, அங்கு இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கொங்கு கலை, இலக்கிய, பண்பாட்டுப் பேரவை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கவிஞர் வைரமுத்து வந்திருந்தார்.

அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே கூட்டத்தில் இருந்து திடீரென செருப்பு ஒன்று பாய்ந்து வர, அங்கு பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.
அந்த செருப்பு கவிஞர் வைரமுத்துவைத் தாக்காமல், கூட்டத்தைக் கடந்து சென்று விழுந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
விசாரணையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் அந்த செருப்பை வீசியது தெரிய வந்தது.
மேலும், செருப்பு வீசிய அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Shocking incident cultural festival Tiruppur slipper thrown at poet Vairamuthu