கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலி.. அரசு மருத்துவமனைக்கு சென்றால் உயிருடன் திரும்புவதே கேள்விக்குறி... அதிமுக கண்டனம்!
AIADMK EPS Condemn to DMK Govt MK Stalin
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், செவிலியர் பிரசவம் பார்க்க வேண்டிய அவல நிலை உருவாகி, ஒரு கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தின் சுகாதாரத் துறையை முற்றிலும் சீரழித்து, “அரசு மருத்துவமனைக்கு சென்றால் உயிருடன் திரும்புவதே கேள்விக்குறி” என்ற பயமூட்டும் நிலையை கேடுகெட்ட திமுக அரசு உருவாக்கியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களே இல்லை என அண்ட புளுகு புளுகிய மாரத்தான் அமைச்சர், போதிய மருத்துவர் இல்லாத காரணத்தால் பறிபோன அந்த கர்ப்பிணி பெண்ணின் உயிருக்கு
இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்??
வெற்று விளம்பரங்களும் பொய் புள்ளிவிவரங்களும் கொண்டு ஆட்சி நடத்தும் இந்த அரசு,
ஒரு பெண்ணின் உயிரைக் கூட காப்பாற்றத் தவறியதற்கான பொறுப்பை ஏற்குமா?
அல்லது இதையும் வழக்கம்போல் மூடி மறைக்க முயலுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
AIADMK EPS Condemn to DMK Govt MK Stalin