கதை கேட்கும்போது தூங்குவேன் என்று பேசிய அஷ்வின்…! - இன்னும் இந்த கேள்விகள் சுடுகின்றன...! - Seithipunal
Seithipunal


சினிமாவில் சில படங்களில் முன்னணி நடிகராக தோன்றிய அஷ்வின், ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த பட விழாவில், அஷ்வின் “எனக்கு ஒரு பழக்கம் உண்டு. கதை கேட்கும்போது அந்தக் கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன்.

இதற்கு முன்பாக 40 கதைகள் கேட்டும் தூங்கிவிட்டேன். ஆனால் இந்தக் கதையில் தான் நான் தூங்கவில்லை” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது, மேலும் சில பட வாய்ப்புகளும் தடைபட்டது.

இதற்கிடையில், கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து, விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகிய ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ என்ற படத்தில் அஷ்வின் நடித்து இருக்கிறார்.

பட விழாவில் கலந்துகொண்ட அவர், “இப்போதும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா?” என்ற கேள்வியை எதிர்கொண்டார்.அதற்கு பதிலளித்த அஷ்வின்குமார், “40 என்பது பொதுவாக எடுத்துச் சொன்ன ஒரு எண்ணிக்கை.

அதற்கு மேலாகக் கூட கேட்டிருக்கலாம், சில கதைகள் குறைவாகவும் இருந்திருக்கும். தியேட்டரில் கூட பலர் படம் பார்த்தபோது தூங்குவதில்லை.

இதுகுறித்து நான் ஏற்கனவே விளக்கம் கூறினாலும், அடிக்கடி இதே கேள்வி கேட்பது மனதை குத்தி காயப்படுத்துகிறது” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ashwin who said he would fall asleep while listening story These questions still sting


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->