புதுச்சேரியில் 38 போலி மருந்துகள் பறிமுதல்…! - இருமல் சிரப்புகளுக்கும் விற்பனை தடை...!
38 counterfeit medicines seized Puducherry Sale cough syrup banned
போலி மருந்து புகாரின் பின்னர் புதுச்சேரியில் நடந்த தீவிர ஆய்வில், பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து, நாடு முழுவதும் விற்பனை செய்துவரும் தகவல் வெளிச்சம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாட்டளாவிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்த 19-ந் தேதி வரை நடைபெற்ற ஆய்வில், 38 வகையான போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யப்படும் நிலையில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அந்த மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து புதுச்சேரியில் மேலும் இரண்டு இருமல் மருந்துகளுக்கும் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவின் படி:குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்லா சந்த்கோதர் நெடுஞ்சாலையில் உள்ள எத்கெம் பார்மா சூட்டிக்கல் நிறுவனம் தயாரித்த ரிஸ்பிபிரஸ் டி.ஆர். (சிரப்) புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரோர்கி பகுதியில் இருந்து வரும் இன்டியன் டிரக் விஷன் நிறுவனத்தின் மெடிகோப் டி. சிரப் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இருமல் மருந்துகளையும் மருந்துகடை உரிமையாளர்கள் வாங்கவும் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து திரவ மருந்துகளின் இருப்பு அளவை துறைக்கு அறிவிக்க வேண்டும்.
அத்துடன், இந்த மருந்துகளை உற்பத்தி நிறுவனங்கள் அல்லது விநியோகஸ்தர்களிடம் திருப்பி அனுப்புமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
38 counterfeit medicines seized Puducherry Sale cough syrup banned