கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐஐடி மாணவர்கள் 65 பேர் தற்கொலை; ஒரு மாதத்திற்கு ஒருவர் உயிரிழக்கும் அபாயம்..!..!
65 IIT students have committed suicide in the last five years
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 65 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி-யில் படிக்கும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழுவின் ஆய்வின் படி, 65 சதவீத உயர்கல்வி நிறுவனங்களில் மனநல நிபுணர்கள் இல்லை என்ற குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 65 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சராசரியாக மாதத்திற்கு ஒரு மாணவர் உயிரிழக்கும் அபாயகரமான நிலையை இது காட்டுகிறது.

இத்தகைய தற்கொலை முடிவுகளுக்கு படிப்பு ரீதியான அழுத்தம், தனிமை மற்றும் வேறுபாடுகள் போன்றவையே முக்கிய காரணமாக அமைகின்றன. இந்நிலையில் குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர்கள் ஆதரவு குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2024-ஆம் மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் மட்டும் 30 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக ஐஐடி கான்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 09 இறப்புகளும், கரக்பூர் ஐஐடியில் ஐந்து ஆண்டுகளில் 11 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் உயிரிழந்தவர்களில் 54 பேர் ஆண்கள் மற்றும் 11 பேர் பெண்கள் அடங்குகின்றனர். இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் தீரஜ் சிங் தெரிவித்துள்ளதாவது:
'கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமையாகும். மேலும் மத்தியஒன்றிய கல்வி அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
65 IIT students have committed suicide in the last five years