ஜனவரி 27-இல் மத்திய அரசைக் கண்டித்து ஒரு நாள் வேலைநிறுத்தம்; அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசை கண்டித்து ஜனவரி 27ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

இது குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தங்களின் நியாயமான கோரிக்கைளை 06 மாத காலத்திற்குள் நிறைவேற்றவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால்,  அந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் காகித அளவிலையே நின்று விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் பிடிவாதமான முடிவை கைவிட வேண்டும் என்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியறுத்தியுள்ளது. மேலும், வாரத்திற்கு 05 நாட்கள் வேலை, வேலை நேரத்தை முறைப்படுத்துதல் மற்றும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 27-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒருநாள் வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கக்கூடும் என்பதால் வடிக்கையாளர்கள்கள் முன்கூட்டியே தங்களது பணப் பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மேலும், கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The All India Bank Officers Association has announced a strike on January 27th to protest against the central government


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->