நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்பிக்கள் அமளிக்கு தடை; இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே வருகை பதிவு: சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு..!
Speaker Om Birla has ordered a ban on disruptions by MPs during the parliamentary session
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா சபை உறுப்பினர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தர விட்டுள்ளார். அகில இந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதன் 86-ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், 'ஜனநாயகம் செழிக்க நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் நடைபெற வேண்டுமே தவிர அமளிகள் நடக்கக்கூடாது என்று அறிவித்துள்ளார்.
அத்துடன், திட்டமிட்டு சபையை முடக்குவது நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் செய்யும் துரோகம் என்றும், மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் காலத்தை தாண்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரையும், மார்ச் 09-ஆம் தேதி முதல் ஏப்ரல் 02-ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடை பெறவுள்ளது. பிப்ரவரி 01-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், விதிமுறைகள் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: 'நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தால் மட்டுமே இனிமேல் வருகை பதிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். லாபியில் நின்றோ அல்லது வேறு இடத்திலோ கையெழுத்திடும் பழைய நடைமுறை இந்த கூட்டத்தொடர் முதல் ரத்து செய்யப்படும்' என்று அவர் அறிவித்துள்ளார்.
English Summary
Speaker Om Birla has ordered a ban on disruptions by MPs during the parliamentary session