தேர்தல் ஆணையம் உத்தரவுபடி, தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.18000 வரை ஊதியம் உயர்வு!
Election Commission SIR job salery hike TN Govt order
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அமல்படுத்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட ஊதிய விவரங்கள்:
வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஊதியம்: ரூ. 6,000-ல் இருந்து ரூ. 12,000 ஆக உயர்வு.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை: ரூ. 1,000-ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்வு.
வாக்குச்சாவடி மேற்பார்வையாளர் ஊதியம்: ரூ. 12,000-ல் இருந்து ரூ. 18,000 ஆக உயர்வு.
இந்த ஊதிய உயர்வு, தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
English Summary
Election Commission SIR job salery hike TN Govt order