பாஜகவின் அசுர வளர்ச்சி! மொத்தமாக 353 எம்பிகள், 1655 எம்எல்ஏக்கள்! வரலாற்றிலேயே மிகப்பெரிய பலத்துடன் பாஜக.. காங்கிரஸ் கதி என்ன?
BJP phenomenal growth A total of 353 MPs1655 MLAs BJP with the greatest strength in history What will happen to Congress
பீகார் சட்டசபை தேர்தலில், பாஜக–ஜேடியூ தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில் பாஜக மட்டும் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதே முக்கிய அம்சமாகும். இந்த வெற்றியால், நாடு முழுவதும் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1654 ஆக உயர்ந்து, கட்சியின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.
ஒருகாலத்தில் சில எம்பி, எம்எல்ஏக்களைப் பெற்றாலே பெருமை என எண்ணிய பாஜக, இன்று உலகிலேயே அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட ஜனநாயகக் கட்சியாகச் சொல்லிக் கொள்ளும் நிலைக்கு வளர்ந்துள்ளது. இந்திரா காந்தி காலத்தில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த பாஜக, 1990க்குப் பிறகு அரசியல் வளர்ச்சியின் உச்சியைத் தொட்டது என்பது வரலாற்று உண்மை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒருமுறை,“இன்று நாடாளுமன்றத்தில் நாங்கள் இரண்டு பேர்… சில ஆண்டுகளில் நாங்கள்தான் அதிகமாக இருப்போம்,”என்ற பேச்சு இன்று நிஜமாகி இருப்பது போல் உள்ளது.
தற்போது பாஜகவுக்குப் பாராளுமன்றத்தில்:
மக்களவை: 240 உறுப்பினர்கள்
ராஜ்யசபா: 103 உறுப்பினர்கள்
மொத்த எம்பிக்கள்: 343
என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில், ஒரு காலத்தில் நாட்டை முழுமையாக ஆட்சி செய்த காங்கிரசுக்கு தற்போது உள்ள மொத்த எம்பிக்கள் 126 மட்டுமே.
மாநில சட்டமன்றங்களைக் கணக்கில் எடுத்தால், பாஜகவுக்கு:
உத்தரப்பிரதேசம் – 258 எம்எல்ஏக்கள்
மத்தியப்பிரதேசம் – 165 எம்எல்ஏக்கள்
குஜராத் – 162 எம்எல்ஏக்கள்
ஜம்மு-காஷ்மீர் – 29
டெல்லி – 48
புதுச்சேரி – 9
என வரலாற்றிலேயே உயர்ந்த பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
2014-ல் 1035 இருந்த பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வரும் நிலையில், தற்போது 1654 ஆக அதிகரித்துள்ளது. இது பாஜக வளர்ச்சி வேகம் எவ்வளவு அபரிமிதமாய் இருக்கிறது என்பதற்கு மிகப்பெரிய சான்று.
இதற்கு பீகார் வெற்றி மேலும் ஒரு பலமான தூணாக அமைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் 240 இடங்களில் வென்றதால் பாஜக மைனாரிட்டி கட்சியாக விமர்சிக்கப்பட்டாலும், அதற்குப் பிறகு நடந்த மாநிலத் தேர்தல்களில் பெருவெற்றி பெறும் நிலையில் உள்ளது.
காங்கிரசுக்கு நாட்டில் தற்போது 640 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன. பாஜகவோ, எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் என இந்தியாவிலும் உலக அளவிலும் அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அரசியல் சக்தியாக உயர்ந்துள்ளது.
English Summary
BJP phenomenal growth A total of 353 MPs1655 MLAs BJP with the greatest strength in history What will happen to Congress