பி.எம்.கிசான் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி உதவி - மோடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில், தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக ஆந்திராவின் புட்டபர்த்தியில் இருந்து சிறப்பு விமானத்தில் கோவை விமான நிலையம் வருகை தரும் மோடியை, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் உயர்பதவி அரசு அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்கின்றனர்.மேலும், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரதமர், மதியம் 1.30 மணிக்கு மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் அடைவார்.

அங்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பாரம்பரிய வரவேற்பும் சிறப்பு மரியாதையும் வழங்கப்படுகின்றன.தொடர்ந்து பிரம்மாண்டமாக நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டை மோடி துவக்கி வைத்து, ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கப்படும் ‘பி.எம்.கிசான்’ திட்டத்தின் 21-வது தவணையாக, 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித் தொகையை வெளியிடுகிறார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலேயே 21,80,204 விவசாயிகள் நன்மை பெறுகின்றனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 44,837 பேர் பயனடைகின்றனர்.அதன் பின்னர், இயற்கை வேளாண்மையில் சிறப்பு சாதனை புரிந்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் பிரதமர், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். அடுத்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சியையும் அவர் பார்வையிடுகிறார்.நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பிறகு, பிற்பகல் 3.30 மணிக்கு கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இயற்கை விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.பிரதமரின் வருகையை முன்னிட்டு, கொடிசியா வளாகம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் பகுதி SPG பாதுகாப்பு வலயத்தில் கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநாட்டுப் பகுதியை சுற்றியுள்ள முக்கிய இடங்களிலும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை–அவினாசி சாலையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு கண்காணிப்பில் நின்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Kisan to provide Rs 18000 crore assistance to 9 crore farmers Modi announces


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->