புதுவையில் ஆட்சி மாற்றமா? உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளருடன் முதலமைச்சர் ரங்கசாமி சந்திப்பு! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர்  நிதிஷ் குமார் வியாஸ் முதலமைச்சர் ரங்கசாமியை  மரியாதை நிமித்தமாக  சந்தித்தார். 

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வருகை புரிந்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர்  நிதிஷ் குமார் வியாஸ் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் மரியாதை நிமித்தமாக  சந்தித்தார். 

சந்திப்பின்போது புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் முக்கிய நலத்திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களை நடமுறைப்படுத்துவது குறித்து  நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான ஆய்வு குறித்து கூறினார். அவைகளைக் கேட்டறிந்த  முதலமைச்சர், பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதால், விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு அளிப்பது குறித்து கலந்தாலோசித்தார். 

சந்திப்பின் போது, அமைச்சர் திரு நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்  லக்‌ஷ்மிகாந்தன், தலைமைச்செயலர்  சரத் சவுகான், மத்திய அரசின் உள்துறை அமைச்சக இணைச்செயலர், ரவி ரஞ்சன், அரசு செயலர்கள் திரு கேசவன்  ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there a change of power in Puducherry? Chief Minister Rangasamys meeting with the additional secretary of the Home Ministry


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->