கூவத்தில் ஆந்திர இளைஞர் சடலம்: ஜனசேனா கட்சி பிரமுகர் உள்பட 5 பேர் கைது –வெளியான பரபரப்பான தகவல்கள்!
Body of an Andhra youth found in a well 5 arrested including a Janasena party leader exciting news has emerged
சென்னை கூவம் ஆற்றில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடல விவகாரம், சினிமாவை மிஞ்சும் வகையில் கொலை சம்பவமாக மாறியுள்ளது.
இளைஞர் ஒருவர் ஆந்திராவில் கொலை செய்யப்பட்டு, பின்னர் அவரது சடலம் சென்னைக்கு காரில் கொண்டு வந்து கூவம் ஆற்றில் வீசப்பட்டதற்காக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, சென்னையின் கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம், திருப்பதி அருகே ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு என்கிற ராயுடு (வயது 22) என்பவர் என அடையாளம் காணப்பட்டது. இதன் பின்னணியில் நடந்த போலீஸ் விசாரணையில் அவர், ஜனசேனா கட்சி ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி பிரதிநிதி சந்திரபாபுவின் வீட்டில் வேலை பார்த்து வந்தவர் என தெரியவந்தது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம், ஒரு கார் வந்ததும் அதிலிருந்து சடலம் வீசப்பட்டதும் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காரின் பதிவு எண்ணை வைத்து தொடுக்கப்பட்ட விசாரணையில் இந்த கொலைக்குற்றம் வெளியானது.
சந்திரபாபு (35) – ஜனசேனா கட்சி பிரதிநிதி,வினுதா கோட்டா (31) – சந்திரபாபுவின் மனைவி,சிவகுமார் (36) – கட்சி தகவல் தொழில்நுட்ப அணியினர்,கோபி (24),ஷேக் தாசர் (23) – கார் டிரைவர், ரேணிகுண்டா பகுதி,இவர்கள் அனைவரும் திருத்தணி அருகே தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணையில் பிரமுகர் சந்திரபாபுவின் மனைவி வினுதா கோட்டா உடை மாற்றும் போது அவரது புகைப்படங்களை ராயுடு செல்போனில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த புகைப்படங்கள் பின்னர் தெலுங்குத் தேச கட்சி எம்.எல்.ஏ பஜாலா சுதீர் ரெட்டியின் ஆதரவாளருக்கு அனுப்பப்பட்டதாக தெரிந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட கோபத்தில், சந்திரபாபு முதலில் ராயுடுவை பாட்டியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தாலும், பின்னர் மீண்டும் அழைத்து வந்து, தகராறின் போது கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், அரசியல் பிரச்சனைகளைத் தவிர்க்க, சடலத்தை சென்னை ஏழுகிணறு பகுதியில் கூவம் ஆற்றில் வீசுவதற்காக திட்டமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையைச் சென்னை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு, முழு குழுவையும் ஒரே நேரத்தில் கைது செய்துள்ளனர். இந்த பரபரப்பான கொலைகாணும் சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Body of an Andhra youth found in a well 5 arrested including a Janasena party leader exciting news has emerged