சர்வதேச பாறை தினம்!. - Seithipunal
Seithipunal


சர்வதேச பாறை தினம் (INTERNATIONAL ROCK DAY) ஆண்டுதோறும் ஜூலை 13 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது, 

ஒரு பாறை என்பது தொழில்நுட்ப நிலைப்பாட்டில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கனிமங்கள் அல்லது மினரலாய்டுகளின் இயற்கையாக நிகழும் திடமான மொத்தமாகும். உண்மையில், லித்தோஸ்பியர், கிரகத்தின் வெளிப்புற திட அடுக்கு, பாறைகளால் ஆனது மற்றும் வரலாறு முழுவதும் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டது.

 

திரு.காபிரியேல் லிப்மன் அவர்கள் நினைவு தினம்!.

குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில், புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த திரு.காபிரியேல் லிப்மன் அவர்கள் நினைவு தினம்!.

காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann ஆகஸ்ட் 16, 1845 - ஜூலை 13, 1921)  ஃப்ரெஞ்சு அறிவியல் அறிஞர். வெள்ளொளியில் அடங்கிய பல்வேறு நிறங்களைப் பயன்படுத்தி வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டியவர். குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுத்த இவரது ஆய்வுகளுக்காக 1908 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.

 கம்யூனிஸ்ட் ஓவியர் திருமதி.ஃபிரிடா காலோ அவர்கள் நினைவு தினம்!.

 

 ஃபிரிடா காலோ (Frida Kahlo - ஜூலை 6, 1907 – ஜூலை 13, 1954) மக்டலேனா கார்மென் ஃப்ரிடா கஹ்லோ யா காலெரோன்) என்பவர் பன்னாட்டளவில் புகழ் பெற்ற ஒரு மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஓவியர் ஆவார். இவர் மெக்சிக்கோவின் உள்நாட்டுப் பண்பாட்டுச் செல்வாக்கையும்; உண்மையியம், குறியீட்டியம், அடிமன வெளிப்பாட்டியம் போன்ற ஐரோப்பியக் கலை இயக்கங்களின் செல்வாக்கையும் கொண்ட நாட்டுப்புற கலை பாணியில்; உயிர்ப்புள்ள நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்தார். 

 பெரும்பாலான இவரது ஆக்கங்கள், அவருடைய துன்பங்களையும், பெண்ணியத் தன்மையையும் குறியீடாக வெளிப்படுத்தும் தன்னுருவ ஓவியங்கள் (self-portraits) ஆகும்.   மெக்சிகன் தேசிய மற்றும் பழங்குடி மரபுகளின் அடையாளமாக அவரது படைப்புகள் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது, ஆனால் இதைக்காட்டிலும்  பெண் துன்பம் மற்றும் பெண் தன்மையை சமரசமற்றவகையில் சித்தரிப்பது ஆகியவற்றை பெண்ணியவாதிகளால் சிறப்பானவையாக கருதப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

International Rock Day


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->