திடீரென இடைநிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். அணியின் மாநில மாநாடு...தொண்டர்கள் கடும் பரபரப்பு !!!
OPS teams state conference suddenly suspended volunteers state panic
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து,கடந்த ஜூலை 14-ந் தேதி வெளியேறிய பின்னர், மதுரையில் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெறவிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓ.பன்னேர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது, “சென்னை YMCA திருமண மண்டபத்தில் நடந்த தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 04-09-2025 அன்று நடக்கவிருந்த மாநாடு, கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின் பேரில் ஒத்திவைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary
OPS teams state conference suddenly suspended volunteers state panic