பள்ளி மாணவனுடன் உல்லாசம்: கைதான ஆசிரியை ஜாமீன் கேட்டு மனு!
Fun with a school student Teacher arrested seeks bail
பள்ளி மாணவனை சொகுசு ஓட்டல்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்த வழக்கில் கைதான ஆசிரியை ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பை மாகிம் பகுதியில் உள்ள பிரபலமான பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் பிபாஷா குமார்,அந்தப்பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவனை காதலித்து உள்ளார். அவனை கடந்த ஆண்டு சொகுசு ஓட்டல்களுக்கு அடிக்கடி அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மாணவன் பள்ளியை விட்டு நின்ற பிறகும் அவனுக்கு ஆசிரியை தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து சமீபத்தில் மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கில் ஆசிரியையை கைது செய்தனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆசிரியை பிபாஷா குமார் ஜாமீன் கேட்டு மும்பை போக்சோ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-மாணவன் தான் என்னை கண்மூடித்தனமாக காதலித்தான். அந்த மாணவன் என்னை மனைவி என்று கூட அழைத்தான். அவன் என்னை நேரில் சந்திக்க விரும்பியதாக கூறியபோதும் கூட, உனது தாய் அனுமதித்தால் மட்டுமே சந்திப்பேன் என கூறியிருந்தேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். விரைவில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Fun with a school student Teacher arrested seeks bail