இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை – 4 குழந்தைகள் தாயின்றி பரிதவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து ஒரு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சோகமான சம்பவம் ஆலங்குளத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்த அருண்பாண்டி (30), காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ஸ்டெல்லா எஸ்தர் (27). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 3 மாத ஆண் குழந்தை என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

10 மாதங்களுக்கு முன் ஸ்டெல்லாவின் தாயார் ஜெயா, வங்கி கடன் மூலம் வாங்கிய வீட்டை மகளுக்காக ஒப்படைத்திருந்தார். அந்த வீட்டுக்கான கடனை அடைப்பதற்காக, ஸ்டெல்லா தனது தாயாருடன் சேர்ந்து மாடுகள் பராமரிக்கும் வேலை செய்துவருகிறார்.

ஒரு நாளில் வந்த வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று நம்பிய ஸ்டெல்லா, அதில் முதலில் சிறிய அளவில் லாபம் பெற்றதால் ஊக்கம் பெற்றார். பின்னர் வீட்டு கடனை விரைவில் அடைத்துவிடலாம் என்ற ஆசையில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பலரிடம் கடன் எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டார்.

ஆனால் எதிர்பார்த்தபடி பணம் வராததால் தீவிர ஏமாற்றம், கடனாளர்களின் அழுத்தம் மற்றும் குடும்பத் தகராறுகள் ஏற்பட்டு மன அழுத்தத்தில் சென்றார்.

ஜூலை 10-ஆம் தேதி, தனது தாய் வீட்டுக்கு சென்ற ஸ்டெல்லா, குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அருகே உள்ள மாட்டுத் தொழுவத்தில் போய் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young woman commits suicide by poisoning 4 children suffer without their mother


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->