பெண் கல்வி உரிமைக்காக போராடிய திருமதி.மலாலா யூசஃப்சாய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
Happy birthday wishes to Ms Malala Yousafzai who fought for womens education rights
பெண் கல்வி உரிமைக்காக போராடிய திருமதி.மலாலா யூசஃப்சாய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
இன்று பிறந்தநாள் காணும்பெண் கல்வி உரிமைக்காக போராடிய உலக அடையாளச் சின்னம், திருமதி.மலாலா யூசஃப்சாய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
பெண் கல்வி உரிமைக்காக போராடிய உலக அடையாளச் சின்னம், மலாலா யூசஃப்சாய் 1997ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தார்.
மலாலா, 2013ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையை தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வையே ஐக்கிய நாடுகள் மலாலா தினமாக அறிவித்தது.
பாகிஸ்தானில் சில பகுதிகளில் பெண்கள் படிக்கக்கூடாது, தெருக்களில் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து இவர் போராடினார்.
இவர் பொது இடங்களிலும், பெண்கல்வி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினார். எனவே, இவரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு ஆபத்தான நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றார்.
2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பாகிஸ்தானியப் பெண் மற்றும் மிக இளையவள் என்ற பெருமையை கொண்டவர்.

கவிஞர் திரு.நா.முத்துக்குமார் அவர்கள் பிறந்ததினம்
நல்ல நண்பன் வேண்டும் என்று! அந்த மரணமும் நினைக்கின்றதா, சிறந்தவன் நீதான் என்று! உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா!". கவிஞர் திரு.நா.முத்துக்குமார் அவர்கள் பிறந்ததினம்!.
கவிஞர் நா.முத்துக்குமார் (ஜூலை12, 1975 – ஆகஸ்ட் 14, 2016), தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.
English Summary
Happy birthday wishes to Ms Malala Yousafzai who fought for womens education rights