பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 3 கிலோ தங்கம் கொள்ளை!
3 kilograms of gold stolen at gunpoint in broad daylight
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 3 கிலோ தங்கம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம், கர்நாடகா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரம்மபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சரப்பஜார் பகுதியில் உள்ள ஜெய்பவானி வணிக வளாகத்தின் முதல் மாடியில் இயங்கி வரும் நகை கடையில் இந்த அதிரடிக் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது .
நேற்று மதியம் 12 மணியளவில், முகமூடி அணிந்த நால்வர் கொண்ட கும்பல் கடையில் நுழைந்தது. அவர்கள் திடீரென கடை உரிமையாளரின் தலையில் துப்பாக்கியை வைத்துத் தகராறு செய்து, கடையில் இருந்து சுமார் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கினார். தகவலின் பேரில், மாநகர போலீஸ் கமிஷனர் ஷரணப்பா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. மேலும், மதியம் 12 மணி முதல் 12.45 மணி வரை அவர்கள் கடையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து துப்பறியும் நாய் பிரிவு, தடயவியல் நிபுணர்கள், மற்றும் கைரேகை ஆய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆனால், ஆரம்பக்கட்ட விசாரணையில், கடையில் 1300 கிராம் தங்க நகைகளே இருப்பது தெரிய வந்துள்ளது. இது கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.
பட்டப்பகலில் துப்பாக்கி மிரட்டலுடன் நிகழ்ந்த இக்கொள்ளை சம்பவம், கர்நாடகா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரம்மபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
3 kilograms of gold stolen at gunpoint in broad daylight