மீண்டும் பீதியை கிளப்பிய அமித் ஷா! கொந்தளிப்பில் அதிமுக! நீடிக்குமா அதிமுக-பாஜக கூட்டணி!
ADMK BJp Alliance Amit shah
2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ளது.
2024 மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக போட்டியிட்டது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இவை மீண்டும் இணைந்திருப்பது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.
மேலும், இந்த கூட்டணி தேர்தல் வரை நிலைக்காது என்றும் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அது "கூட்டணி ஆட்சி" ஆகும் என பாஜகவின் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில், “கூட்டணி ஆட்சி கிடையாது” என அதிமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் அதிமுக–பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் பாஜக பங்கு பெறும்" என்று தெரிவித்து உள்ளார். இது மேலும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிகமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கூட்டணி ஆட்சி என அமித் ஷா எங்கும் கூறவில்லை. கூட்டணி வென்றால், ஆட்சியில் பங்கெடுப்பீர்களா என்ற கேள்விக்கு ஆம் அன்று தான் கூறியுள்ளார் என்ற விளக்கமும் சொல்லப்படுகிறது.
English Summary
ADMK BJp Alliance Amit shah