திமுகவின் முக்கிய புள்ளிய தட்டி தூக்கிய ஈபிஎஸ்.!
DMK Fisherman wing deputy state secretary Nazareth Basilian joined AIADMK
திமுக மாநில துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின.
இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலை தான் அதிமுகவில் இணைய போவதாக வரும் செய்திகள் உண்மை இல்லை என ஆஸ்டின் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் நசரேத் பசிலியான் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து தன்னையும் அவருடன் வந்த ஆதரவாளர்களையும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK Fisherman wing deputy state secretary Nazareth Basilian joined AIADMK