அமைச்சர் செஞ்சி மஸ்தானை சுத்து போட்ட திமுகவினர் வாக்குவாதம்.!!
DMK cadres argument with Minister Senji Mastan
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மாவட்ட வாரியாக உட்கட்சி பூசல் அதிகரித்து காணப்படுகிறது. மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தரப்பினருக்கும் அமைச்சர் மூர்த்தி தரப்பினருக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் பூதாகரமாக வெடித்ததை அடைத்து அமைச்சர் கே.என் நேரு தலைமையில் பஞ்சாயத்து நடைபெற்றது.
இருப்பினும் திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் மேயருக்கும் இடையேயான பிரச்சனை தீரவில்லை. அதேபோன்று நெல்லை மாவட்டத்தில் அமைச்சருமான மனோ தங்கராஜ் தரப்பினருக்கும் திமுக மாவட்ட செயலாளர் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சமாதானம் செய்துள்ளார்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் திமுகவின் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெளியே வந்த செஞ்சி மஸ்தானை மடக்கிய திமுக மாவட்ட பிரதிநிதி ஜெயராமன் பிரகாஷ் என்பவர் வேண்டுமென்றே பொய்யான புகார் கூறுவதாக வாக்குவாதம் செய்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு பெற்றுக் கொண்டது.
English Summary
DMK cadres argument with Minister Senji Mastan