மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களைக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்டம்பர் 9) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வேட்பாளர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது:

மதுராந்தகம் (தனி) தொகுதி: திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன், பி.ஏ., பி.எல். போட்டியிடுகிறார்.

தாராபுரம் (தனி) தொகுதி: வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல். போட்டியிடுகிறார்.

காலியாக உள்ள இவ்விரு தனித் தொகுதிகளிலும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை எதிர்கொள்ளும் வகையில் திமுக தனது வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு முன்னதாகவே அறிவித்துள்ளது. இதனால் அக்டோபர் 6 இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Announces Candidates for Madurantakam and Dharapuram Bypolls MK Stalin Releases Official List


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->