"திமுக ஆட்சியை நடத்தியதே ரத்தீஷ்தான்; தற்போது தலைமறைவு": அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


கடந்த திமுக அரசாங்கத்தின் முழு நிர்வாகத்தையும் பின்னணியில் இருந்து நடத்தியதே ரத்தீஷ் என்பவர்தான் என்றும், அதனால்தான் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரது பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "கடந்த திமுக ஆட்சியின்போது 24 மணி நேரமும் 'குறிஞ்சி' இல்லத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் உடனே இருந்தவர் இந்த ரத்தீஷ். அவர் தனது 10 நண்பர்களுடன் சேர்ந்துதான் முந்தைய ஆட்சியை முழுமையாக நடத்தியுள்ளார்" எனக் குறிப்பிட்டார். மேலும், அதிகார மையமாகச் செயல்பட்ட ரத்தீஷ் தற்போது தலைமறைவாக உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையிலும், ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே மிசா, சர்க்காரியா ஆணையம் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பாக வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், அமைச்சர் நிர்மல்குமார் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் மாநில அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்றியுள்ளன.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Law Minister Nirmalkumar Claims DMK Govt Was Run By Ratheesh Says He Is Currently Absconding


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->