அதிமுக கூட்டணியில் கேள்விக்குறியான தேமுதிக.. பிரேமலதாவின் அதிரடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, எதிர்வரும் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியை மாற்றும் நிலைப்பாட்டிற்கு அதிகாரபூர்வமாக வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக முரண்பட்ட தகவல்களை அவ்வப்போது பேசி கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம் என சொல்லாமல் சொல்லி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எந்த விதமான அழைப்பும் அதிமுக சார்பில் இருந்து வரவில்லை என்று தெரிவித்தார்.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் பேசப்பட்ட படி, சுதீஷுக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதியை எதிர்பார்த்து தேமுதிக காத்துக்கிடக்கிறது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் அதிக தொகுதியை கேட்டு வருவதால், தேமுதிகவை டீலில் விட்டு கடைசியாக விட்டுப்பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் அதிமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

படம் : தேர்தல் கூட்டணி அதிமுக - தேமுதிக.

அவ்வாறான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று அணியில் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளும் தேமுதிக தரப்பில் நடத்தப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு அதிகப்படியான தொகுதியை வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது. இதனால் அதிமுகவிற்கு எந்த விதமான பெரிய இழப்பும் ஏற்படப்போவதில்லை என்றும், அதிமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு பெரிய கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றியை அடையும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. 

அதனால், தேமுதிக கூட்டணியில் இருந்தால் கொடுக்கும் இடங்களை வாங்கிவிட்டு அமைதிகாக்கலாம் அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறி அவர்களுக்கான பாதையை தேடிக்கொள்ளலாம் என்ற முடிவில் அதிமுகவும் தேமுதிகவை டீலில் விட்டுள்ளது. இந்த விஷயம் அரசல் புரசலாக தேமுதிக தலைமையின் காதுகளுக்கும் சென்றுள்ளது. 

படம் : தேர்தல் பிரச்சாரம் - தேமுதிக.

இதனையடுத்து, மாற்று அணியில் சென்று சேர்ந்தாலும் களப்பணியாற்ற தேமுதிக நிர்வாகிகளை தயார் செய்து வருகிறது. இதனை உறுதி செய்யும் பொருட்டு ஆவடி மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், " அன்றைய மன்னர்கள் வாள் வைத்து போராடி வந்தனர். இன்று அரசியலில் வேல் வைத்து போராட்டம் நடத்துகிறார்கள் என பாஜகவை குறிப்பிட்டு பேசிய நிலையில், நமக்கு வாளும் வேண்டாம், வேலும் வேண்டாம். மக்கள் சக்தி என்பது நமக்கு போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதனைப்போன்று, ஆட்சி அதிகாரத்தின் மீது முனைப்பு காண்பித்துள்ளதை உறுதி செய்யும் பொருட்டு, " நமது கட்சி ஆட்சிக்கும் வரவில்லை, கட்சி பதவியை தவிர அரசு பதவிக்கு கட்சியினர் வரவில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றியடையும். கூட்டணி தர்மத்தின் கீழ் உண்மையுடன் இருப்போம். பெண் வாக்காளர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். 2021 ஆம் வருடம் தேமுதிகவுக்கு ராசியான வருடமாக அமையும் " என்று பேசியுள்ளார். 

படம் : விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக

இவை அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் தமிழகத்தின் மூன்றாவது அணி அமைத்து மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளுடன் இணையலாம் எனவும், இல்லையென்றால் அதிகாரம் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை வீழ்த்த திமுகவுடன் கூட கூட்டணிக்கு செல்லலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியானாலும் சரி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் நாட்கள் வரை என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Takes Final Decision about Leave ADMK Alliance TN Assembly Poll 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->