யாருடன் கூட்டணி? நாள் குறித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!
DMDK Alliance jan 2026 ADMK BJP
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி கட்சியின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேமுதிக வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, கடலூரில் வரும் ஜனவரி 9-ஆம் தேதி மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. அப்போது எவ்வாறு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம், யார் வேட்பாளர்கள் என்பன அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என்றார்.
அதற்கு முன்னதாக, 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்றும், அதன் பிறகு தாமும் விஜய பிரபாகரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், “பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்கிறேன். பெண்கள் மீதான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மது, கஞ்சா போன்றவற்றே காரணம். இளைஞர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையால் மட்டுமே இது கட்டுப்படும்,” என்றார்.
English Summary
DMDK Alliance jan 2026 ADMK BJP