உடனே என்னை விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லாதீங்க... முதல் நாளே இப்படியா? கொந்தளித்த சேரன்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சேரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மரியாதைக்குரிய மக்களே... அனைத்து மக்களையும் சேர்த்துதான்.. கட்சி பேதமின்றி சொல்கிறேன்..  நீண்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவரை நம்பி ஒரு பகுதி மக்கள் முதல்வர் என வாக்களித்து மறு பகுதி மக்கள் அதற்கு ஆதரவும் தந்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்தும் பார்த்தாகிவிட்டது..  

மக்களும் முழுக்கவே அனைவரும் புதியவர்கள் வேண்டும் என தெரிந்துதான் இந்த வாக்கை அளித்திருக்கிறார்கள்..  பதவிப்பிரமானம் முடிந்தவுடனேயே விமர்சனங்களை முன் வைக்காமல் வாழ்த்திவிட்டு அமைதிகாப்பதே நன்று..  

அதற்குள் தமிழ்த்தாய் பின்னால் போய்விட்டாள், 200 யூனிட் கரண்ட் என்னாச்சு என முழங்காமல்  கொஞ்சம் வேலை செய்ய விடலாம்.. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் விஜய் போடச்சொல்லி இருப்பாரா... 

200 யூனிட் ஃபிரி என்பதில் என்ன குளறுபடி  இதெல்லாம் முதல் நாளிலேயே கேட்கலாமா... 
அவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் முறையாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்..  

விஜய் முழுக்க முழுக்க புதியவர்..  அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய நாட்களெடுக்கும்..  பொறுத்திருங்கள்.. அவர் புரிந்து நன்றாக செயல்பட்டுவிட்டால் நல்லதுதானே.. அப்படி இல்லையென்றால் மக்களே புரிந்து மாற்றிவிடுவார்கள் தானே... 

இதை நான் யாருக்கு ஆதரவாகவும் வாசிக்கவில்லை...  இல்லை உடனே விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக்கூடாது... விருப்பு வெறுப்புகளை துறந்து
பொதுவான ஒரு அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம் என்பதற்காகத்தான் இந்த பதிவு.. 

முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நல்ல சமுதாய கட்டமைப்பை உருவாக்க உங்கள் அர்பணிப்பை தாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director cheran support to TVK Govt CM Vijay


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->