வாய்ப்பு கொடுங்க.. டெல்லிக்கு பறந்த கடிதம்! பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்!
Delhi OPS PM Modi BJP Alliance
தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடி செலவில் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, இரவிலும் விமானங்கள் இயக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த புதிய விமான நிலையம் வரும் 26ம் தேதி திறக்கப்படுகிறது. தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி இவ்விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், தமிழகம் வரவுள்ள பிரதமரை நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ள ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “மதுரை-போடிநாயக்கனூர் ரெயில்வே பாதை மின்மயமாக்கல் உள்ளிட்ட பல திட்டங்களை தாங்கள் தொடங்கி வைக்க உள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். எனது தொகுதியுடன் தொடர்புடைய இந்த திட்டங்கள் முன்னேறுவதில் நானும் உற்சாகம் கொள்கிறேன்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி வழங்கினால், அதனை ஒரு பெருமைமிகு வாய்ப்பாகக் கருதுவேன்” என தெரிவித்தார்.
English Summary
Delhi OPS PM Modi BJP Alliance