பணி நியமன ஆணை பெற்ற 15 நேரடி நியமன துணை ஆட்சியர்கள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வாழ்த்து..!
Minister KKSSR Ramachandran congratulates 15 directly appointed Deputy Collectors who have received their appointment orders
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-I தேர்வு மூலம் துணை ஆட்சியர் பணியிடத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 25-08-2025 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இவ்வாறு பணி நியமன ஆணையினைப் பெற்ற 15 நேரடி நியமன துணை ஆட்சியர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துரையாடியுள்ளார். மேலும், அவர்களது பணி சிறப்புடன் அமைய உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்நிகழ்வின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா, கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் மு.சாய் குமார், மற்றும் கூடுதல் ஆணையர் (வருவாய் நிருவாகம்) ச.நடராஜன், ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister KKSSR Ramachandran congratulates 15 directly appointed Deputy Collectors who have received their appointment orders