ஆபத்தான முறையில் செல்பி எடுக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?
India tops the list of countries with the most dangerous selfies
உலகில் செல்பி எடுப்பதில் ஆபத்தான நாடுகள் குறித்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தி பார்பர் சட்ட நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதன்படி, கடந்த 2014 முதல் 2025 மே மாதம் வரை செல்பி எடுக்கும் போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் காயங்களை கண்காணித்து ஆய்வு நடத்தியது. இதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆய்வு, செல்பி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை அடிப்படையாக நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அதில் அதிக மக்கள் தொகை, ரயில் தண்டவாளங்கள், பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு செல்வது, சமூக ஊடக கலாசாரம் உள்ளிட்ட பல காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி, நடத்தப்பட்ட ஆய்வில், உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1 சதவீதம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

செல்பி தொடர்பான அனைத்து இறப்புகளிலும் பெரும்பாலும் 46 சதவீதம் கூரைகள், பாறைகள் அல்லது உயரமான கட்டமைப்புகளில் இருந்து விழுவதே காரணமாக இருப்பதாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. இவ்வாறு செல்பி எடுக்கும் போது மரணத்தை தழுவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ஆபத்தான நாடுகள் பட்டியல்:
01) இந்தியா-271 நிகழ்வுகள் (214 உயிரிழப்புகள், 57 காயங்கள்)
02) அமெரிக்கா- 45 நிகழ்வுகள் (37 உயிரிழப்புகள், 8 காயங்கள்)
03) ரஷ்யா- 19 (18 உயிரிழப்புகள் மற்றும் ஒரு காயம்)
04) பாகிஸ்தான்- 16 இறப்புகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது, எந்த காயமும் இல்லை,
05) ஆஸ்திரேலியா -13 செல்பி இறப்புகளுடன் முதல் 5 இடங்களைப் பிடித்தது.
06) இந்தோனேசியா (14 உயிரிழப்புகள்)
07) கென்யா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரேசில் (தலா 13 உயிரிழப்புகள்)
English Summary
India tops the list of countries with the most dangerous selfies