பக்தர்களுக்கு அனுமதி இல்லை..குருவாயூர் கோவில் அறிவிப்பு!
No permission for devotees Guruvayur temple announcement
குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை துவங்க உள்ளது,ஆகவே பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் . கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் இது.
ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம். அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
இந்தநிலையில், இந்தக் கோவில் புனித குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் ஜாபர் என்ற இளம் பெண் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டார்.
ஜாஸ்மின் ஜாஃபர் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் கோவிலில் வெவ்வேறு வகையான பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் மதியம் வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆறு நாட்களுக்கு இந்த பூஜை தொடரும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கிடையே, ரீல்ஸ் வெளியிட்ட ஜாஸ்மின் ஜாபர், அந்த வீடியோவை அழித்து விட்டது உடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
English Summary
No permission for devotees Guruvayur temple announcement