அடுத்த டார்கெட்... திமுகவில் இணையப்போகும் 2 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்... காங்கிரஸ் எம்பி பகீர் பேட்டி!
Congress MP say ADMK ex minister joint to DMK
ஒவ்வொரு கட்சியுடனும் உறவாடி பின்னர் அழிக்கிறதே பாஜகவின் வேலை என விமர்சித்துள்ள விருதுநகர் எம்.பி. ப. மாணிக்கம் தாகூர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அடுத்த பாதிப்புக்குள்ளாவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்த பாஜக, அந்தக் கட்சியை அழித்தது போலவே, அதிமுகவிலும் அதே நிலை உருவாகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் விரைவில் பாஜகவில் இணைவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் ஊரக வேலை உறுதி திட்ட நிதி குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு திட்டத்தை தமிழகத்தில் முடிக்க முயலுகிறது என்றும், அதற்கெதிராக மத்திய அமைச்சர் என்றவாறே எடப்பாடி பழனிசாமி குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில் மௌனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மாநிலங்களவையில் ராகுல் காந்தி எழுப்பிய ஆப்ரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில் அமெரிக்காவின் தலையீடு போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமலேயே பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார் என்றார்.
அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு வரிவிதித்தால், இந்தியாவும் அதேபோல் பதிலடி கொடுக்க வேண்டும். ஆனால், டிரம்பை பார்த்து பள்ளி மாணவன் போல் நடக்கும் நிலை பிரதமருக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக பேசிய அவர், “அவரை ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்து, கட்சியை உடைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தியது. அவரைப் போல நன்னடை உள்ள நபரை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள்.
பன்னீர்செல்வம் சந்திக்க விரும்பிய பிரதமரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நபர் நயினார் நாகேந்திரன், ஆறு முறை போனில் அழைத்தும் பதிலளிக்கவில்லை. இதுபோன்ற அவமானம் அவருக்கு நேரிடக்கூடாது” என்றார்.
English Summary
Congress MP say ADMK ex minister joint to DMK