முதல்வரின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து: வரிசை மாற்றத்தால் எழுந்த புதிய சர்ச்சை!
cm vijay tamil thai vazhthu issue
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலத்துடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால், இந்த விழாவில் பாடல்கள் இசைக்கப்பட்ட வரிசை முறை தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் நெறிமுறைகளின்படி, அரசு விழாக்கள் தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதும், விழா நிறைவடையும் போது தேசிய கீதம் இசைக்கப்படுவதும் நீண்டகால மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாகத் தேசிய கீதம், மூன்றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. மாநிலத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நடைமுறை மாற்றத்திற்குத் திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், “தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா?
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது.
தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
cm vijay tamil thai vazhthu issue