'வங்கதேச மொழி' சர்ச்சை விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
CM Stalin Condemn to Delhi Police
டெல்லி காவல்துறையால் வங்க மொழியை 'வங்கதேச மொழி' என தவறாக குறிப்பிட்டிருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் டெல்லி காவல்துறையால், நம் தேசிய கீதம் உருவான வங்க மொழியை ‘வங்கதேச மொழி’ என குறிப்பிடுவது மிகுந்த அவமதிப்பாகும்.
இது யாதொரு தவறோ, கவனக்குறைவோ அல்ல. இந்தியாவின் பன்முகத் தன்மையை மெல்ல மெல்ல அழிக்க முயலும் தீவிர எண்ணத்தை இது வெளிப்படுத்துகிறது.
இந்தி தவிர்ந்த பிற மொழிகளை அடக்க முயலும் இந்த போக்கு, மாநில அடையாளங்களை புறக்கணிக்கின்ற ஒரு ஆபத்தான திட்டத்தின் நீட்சியாகும்.
இந்நிலையில், மேற்குவங்கத்தின் மரபையும் மக்களையும் உறுதியாக பாதுகாக்கும் நம்பிக்கையான குரலாக மம்தா பானர்ஜி இருக்கிறார். இதற்கு அவர் தக்க பதிலடி கொடுப்பார் என்றும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
சர்ச்சை பின்னணி:
டெல்லி லோதி நகர் காவல்நிலையம் மேற்குவங்க போலீசாருக்கு அனுப்பிய கடிதத்தில், "சில ஆவணங்கள் வங்கதேச மொழியில் இருந்ததாக மொழிபெயர்க்கப்பட்டன" எனக் கூறப்பட்டது. இதையடுத்து முதலில் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது அதையேத் தொடர்ந்து ஸ்டாலின் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
English Summary
CM Stalin Condemn to Delhi Police